Jan 5, 2012 | By: R.T.அமுதன்

வாழை இலை சாப்பாடு ஏன் ?

வாழை இலையில் விருந்து படைப்பது தான் நம் தமிழர் பண்பாடு. நாம் தட்டில் சாப்பிடுவதற்கும் இழையில் சாப்பிடுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு
* தட்டில் சாப்பிடும் உணவை விட இலையில் சாப்பிடும் போது அதன் சுவை இன்னும் அதிகமாகிறது.
* வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்
* சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மமாகவும் இருக்கும்

எவர்சில்வர் பயன்பாட்டிற்கு பிறகு வீடுகளில் பெருபாலானோர் இலையை, மறந்து தட்டுக்கு மாறியுள்ளனர். நகரங்களில்தான் வாழைமரம் வளர்த்து இலை பறிக்க எல்லோருக்கும் வாய்ப்பிருக்காது. வாய்ப்புள்ள கிராமங்களிலும் தட்டையே பயன்படுத்துகின்றனர். அதுமட்டுமல்ல வீட்டில் பெண்களுக்கும் சாப்பாட்டு தட்டு கழுவுகிற வேலை மிச்சம். நேரம் மிச்சம். பாத்திரம் கழுவுகிற தண்ணீர் மிச்சம். பாத்திரத்தை கழுவ பயன்படுத்தும் ராசயண சோப்பின் பயன்பாடு குறைவு என நன்மைகளை உணரமுடிந்தது.இலை, பாலீதீன் தாள்களைப் போல் சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பு ஏற்படுத்தாது என்பது இன்றைய விஞ்ஞான உலகுக்கு முக்கியச்செய்தி.நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே.

வாசகர்களே இன்று முதல் நாமும் வாழை இலை  பயன்படுத்த ஆரம்பிக்கலாமே..... 
  

திருநீறு, சந்தனம், குங்குமம் இடுவது ஏன்?

மஞ்சள், படிகாரம், சுண்ணாம்பு  இவற்றைக் கலந்து குங்குமம் தயார் செய்யப்படுகிறது. இவை மூன்றுமே கிருமிநாசினிப் பொருட்கள் ஆகும். மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்தது நெற்றிக்கண் அதாவது, இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதியில் குங்குமத்தை வைத்தால் அமைதி கிடைக்கும்.ஹிப்னாட்டிஸம் உட்பட எந்தச் சக்தியையும் முறியடிக்கும் சக்தி குங்குமத்துக்கு உண்டு , நம் கபாலத்தில் உள்ள சிந்தனை நரம்புகளின் முடிச்சு இரு புருவங்களுக்கு இடையில் உள்ளது. மனிதன் அதிகமாக சிந்திக்கும் போது சிந்தனை நரம்புகள் சூடேறி நெற்றி வலி தலைபாரம், தலைச்சுற்றல் ஏற்படும். மன உளைச்சல் ஏற்பட்டுத் தன் நிலை மறக்க வேண்டிய சூழ்நிலை உருவாகி பல விரும்பத் தாகத விளைவுகள் ஏற்படும். ஆகவே அந்த நரம்பு மண்டலம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும்.
                                  சந்தனம், திருநீறு, குங்குமம் இவைகளுக்குக் குளிர்ச்சியூட்டும் தன்மை உண்டு. எனவே அந்த நரம்பு மண்டலம் குளிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகச் சந்தனம் பூசி, சந்தனம் காயாமல் இருக்க குங்குமம் இடுகிறோம்.இவற்றைத் தரித்தால் புத்துணர்வும், புதுத் தெளிவும், புதிய சிந்தனைகளும், உற்சாகமும் தோன்றும். உணர்ச்சியற்ற நரம்புகள் தூண்டப்படுகின்றன. மனிதனின் உடற்கூறுக்கு உகந்த முறைகளைத்தான் நாம் இறைவழிபாடுகள் மூலம் அடைகிறோம்.

கோலம் போட சில விதிகள்

* சூரியன் உதிப்பதற்கு முன்பு பசுஞ்சாணம் தெளித்து கோலம்போட வேண்டும்.
* வீட்டு வாசலில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஐதீகம் எனவே புது தண்ணீரே தெளிக்க வேண்டும்.
* தெற்கு பார்த்தோ, தெற்கில் முடியும்படியோ கோலம்போடக்கூடாது.
* கோலம் போட்டதும் காவி இடுவது மும்மூர்த்திகளை குறிக்கும். சாணத்தின் பசுமை விஷ்ணுவையும், கோல மாவின் வெண்மை பிரம்மாவையும் காவியோட செம்மை சிவனையும் குறிக்கிறது.
* கோலத்தின் நடுவில் செம்பருத்தி, பூசணி பூ வைத்தால் செல்வம் சேரும். * வியாழக்கிழமை துளசி மாட கோலம், வெள்ளிக்கிழமை எட்டு இதழ் தாமரை கோலம் போடுவது நல்லது.
* சனிக்கிழமை பவளமல்லி கோலம் போட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
* பவுர்ணமி தினத்தன்று தாமரைப்பூ கோலம் போடுவது சிறப்பு.
* ஞாயிற்றுக்கிழமை செந்தாமரை கோலம், திங்கட்கிழமை அல்லி மலர்க்கோலம் போடுவது நல்லது.
* வீட்டுச்சுவரையொட்டி போடும் பார்டர் கோலம் தீய சக்திகளை உள்ளே விடாது.
* செவ்வாய்க்கிழமை வில்வ இலை கோலம், புதன் மாவிலைக்கோலம் போடவேண்டும்.
* விழா நாட்களில் இலை கோலம் போடுவது சிறப்பாக இருக்கும்.
* கோலத்தின் 8 பக்கத்திலும் பூக்கள் வைத்தால் திக்பாலகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
* இறந்தவர்களுக்கு செய்யும் விஷேசம், பித்ரு நாட்களில் கோலமிடக்கூடாது.
* இடது கையால் கோலம் போடக்கூடாது.
* பெண்கள் குனிந்து நின்றே கோலம் போட வேண்டும் உட்கார்ந்து போட்டால் செல்வம் குறையும்.
* கணவர் வெளியில் செல்லும் முன்பே கோலம் போட்டுவிடவேண்டும்.
* கோலம் போட்ட பிறகே அடுப்பு பற்றவைக்க வேண்டும்.
* ஞாயிற்றுக்கிழமை சூரிய கோலம் நல்லது.
* ஆள்காட்டி விரலை நீக்கியே கோலம் போட வேண்டும்.
* கிழமைக்கு ஏற்ப வாசலில் கோலமிட்டால் கெட்ட ஆவிகள் நம் வீட்டை நெருங்காது.

*சுபகாரியங்களுக்கு ஒரு கோடு போடக்கூடாது.அசுப காரியங்களுக்கு இரட்டைக்கோடு கூடாது.

*வேலைக்காரர்களைக்கொண்டு கோலமிடக்கூடாது.
                                           இன்று கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன கதையாக, அரிசி கோலம், ரசாயன கோலமானது பின்னர் ஜவ்வு காகிதத்தில் கோலம் அச்சு அடிக்கப்பட்டு வீட்டின் முன் ஒட்டப்பட்டது. இதனால் மேலும் பல நுண்ணுயிர்கள் மடிந்தன, மடிந்து கொண்டிருக்கின்றன, செய்யும் செயலை ஏன், எதற்காக என்று தெரிந்து செய்தால் நன்மை பயக்கும். இல்லையேல் கேலிக்கும் கூத்துக்கும் இடம் கொடுக்க வேண்டும். நம் முன்னோர்கள் கோலத்தை உருவாக்கிய காரணத்தையே நாம் இன்று மறந்துவிட்டோம். இவை நமக்கு நன்மை பயக்குமா? சிந்திப்போம்! செயல்படுவோம்...
Jan 3, 2012 | By: R.T.அமுதன்

கோலம் போடுவது ஏன்?

தமிழர்களுடைய வாழ்க்கை முறை என்பது இயற்கையோடு இயைந்து வாழ்கிற வாழ்க்கை முறை. மற்றவர்களை விட நாம் இயற்கையை நேசிக்கக் கூடியவர்கள். இயற்கையை அரவணைத்து வாழக்கூடியவர்கள். இந்த பூமியின் மண்ணின் தன்மை கெடாமல் இருப்பதற்காக நாம் பசு சாணத்தைத் தெளிக்கிறோம். பசு சாணத்தால் ஆன ஈரம், ஓசோன் வாயுப் படலம் சூழ்ந்திருக்கக்கூடிய சூரிய உதயத்திற்கு முன் இருக்கக் கூடிய காலகட்டத்தில் தெளித்து வாசல் பெருக்கும்போது பிராண வாயு, அதாவது முழுமையான ஆக்ஸிஜன், சுத்தமான ஆக்ஸிஜன் நமக்கு கிடைக்கிறது. மேலும்  குனிந்து பெருக்குதல், குனிந்து  கோலமிடுதல் இதெல்லாம் யோகாசனத்தில் ஒரு நிலையாக வருகிறது. இடுப்புப் பகுதியை வளைத்து, கழுத்தை வளைத்து, குனிந்து கரங்களால் மாவை எடுத்து கோலமிடுதல் என்பது யோகாசன அடிப்படையில் ஆரோக்கியமான சூழலைச் தரக்கூடியது. பசு சாணத்தாலோ, தண்ணீராலோ தெளிக்கும் போது வாசலில் இருக்கும் கிருமிகள் விலகுகிறது. இதனாலும் ஆரோக்கியமான சூழல் உருவாகிறது. நமது இல்லத்திற்கு தினசரி தேவர்கள், லட்சுமி எல்லாம் வருகிறார்கள் என்று ஐதீகம் இருக்கிறது. அவர்களை வரவேற்கும் விதமாகவும் ஒரு மங்களச் சின்னமாக தமிழர்கள் வாழ்க்கை முறையில் இருந்து கொண்டு இருக்கிறது. அதிலும் அந்த மாக்கோலம் இடுதல் என்பது தனிச்சிறப்பு. பச்சரிசி மாவு இடித்து அதில் கோலமிடும் போது நம்முடைய தயாள குணம் வெளிப்படும் விதமாக, எறும்பு, ஈ எல்லாம் சாப்பிடுவதற்கு தானம், தர்மம் செய்வது மாதிரியானதும் இருக்கிறது. 
கோலம் போட சில விதிகள் உள்ளது. அதற்கு ஏற்ப கோலமிட்டால் வாழ்க்கையில் வளம் சேரும்,  அது என்னவென்று அடுத்த பதிவில் பார்க்கலாம்...