Jul 31, 2014 | By: R.T.அமுதன்

கருவில் இருக்கும் குழந்தையை கண்டுபிடிக்க

விஞ்ஞானம் வளர்ந்த இந்த காலத்தில் கருவில் இருக்கும் குழந்தையை கண்டுபிடிக்க கருவானது ஓரளவு வளரும் வரை காத்திருக்க வேண்டும், அதன் பின்பே ஸ்கேன் செய்து பார்க்க முடியும், மனிதன் செய்யும் சில தவறுகளால் அரசு அதையும் தடை செய்து விட்டது. ஆனால் அறிவியல் வளர்ச்சி இல்லாத காலத்திலேயே கரு உண்டான கணத்தில் இருந்தே குழந்தையின் பாலினத்தை துல்லியமாக கண்டறியும் முறையை நம் முன்னோர்கள் நமக்கு கற்பித்துள்ளனர். ஒரு பெண் மூச்சு விடும் நாசியின் பக்கங்களை வைத்தும், அந்த பெண் குழந்தையை சுமக்கும் போது எந்த கையை ஊன்றி மேலே எழுகிறார் என்பதை வைத்தும் இன்னும் இது போன்று நிறைய முறைகளில் இதற்கு முன் இருந்தவர்கள் கணித்தனர்.
"கெற்பதானங்கள் பண்ணக் கிணர்தனிட் சரணங்கணாசி
வற்பணப் பிராணவாய்வு வலத்திலே யோடி லாணாஞ்
சிற்பன விடத்திலோடிற் சிறந்தது பெண்ணதாகும்
பிற்கர வுதயமாகிற் பிலமில்லாக் குருடு வூமை"
என்ற அகத்தியர் அருளிய இந்த பாடலில் கரு உண்டான காலத்தில் நாசியில் ஓடும் மூச்சுக் காற்றை வைத்தே குழந்தையின் பாலினத்தை நம்மால் கணிக்க முடியும் என்பது தான் இந்த பாடலின் மூலம் நாம் தெரிந்து கொள்ளும் செய்தி. அதாவது மூச்சுக் காற்றானது வலது புற நாசியில் ஓடினால் ஆண் குழந்தை எனவும், இடது புற நாசியில் ஓடினால் பெண் குழந்தை எனவும், மூச்சுக்காற்று சீராக இல்லாமல் இருப்பின் பிறக்கும் குழந்தை குருடு, ஊமை போன்ற குறைபாட்டுடன் பிறக்கும் என்பதே இதன் விளக்கம். இதே போன்று குழந்தை கருவில் உண்டான தேதியில் இருந்து என்னென்ன உறுப்புகள் எந்தெந்த மாதங்களில் உருவாகும்,கருவில் குழந்தை உருவான தேதில் இருந்து பிறக்கும் நாள், குழந்தை குறைபாடு, கருச் சிதைவு, மூளை வளர்ச்சி இல்லாமல் பிறப்பது, திருநங்கையாக பிறப்பது போன்ற எண்ணற்ற செய்திகளை துல்லியமாக கொடுத்துச் சென்றுள்ளனர், மேற்கத்திய மோகத்தினாலும், தமிழை தாழ்வாக நினைப்பதாலும், கடவுள் மறுப்பு கொள்கைகளினால் சித்தர் பாடல்களை நாம் புறக்கணிப்பதாலும் இது போன்ற அறிய விடயங்களை நாம் தவற விடுகின்றோம். இவை அனைத்தும் அவர்களின் மெய்ஞானத்தால் தோன்றியவையே, சித்தர் பாடல்களை ஆராய்ந்து வெளிக்கொணர்ந்தால் உலக அளவில் தமிழ் மக்களுக்கு மேலும் அங்கிகாரம் கிடைக்கும் என்பதே என் கருத்து.

பலாவின் சுளையறிய?

பலாப்பழத்தைப் பிளக்காமல் அதன் உள்ளிருக்கும் சுளையின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வழிமுறை மிக எளிமையாகக் கூறப்பட்டுள்ளது.
"பலாவின் சுளையறிய வேண்டுதிலேல் ஆல்கு
சிறுமுள்ளுக் காம்பரு எண்ணி - வருவதை
ஆறிற் பெருக்கியே ஐந்தனுக் கீந்திடவே
வேறெண்ண வேண்டாஞ் சுளை."
- கணக்கதிகாரம்-
விளக்கம் :
பலாப்பழத்தின் காம்புக்கு அருகில் உள்ள சிறு முட்களை எண்ணி ஆறாலே பெருக்கி ஐந்தால் வகுக்க பலாப்பழத்தினுள் உள்ள சுளைகளின் எண்ணிக்கையை அறியலாம் !

பூசணியில் எத்தனை விதை இருக்கிறது ?

"கீற்றெண்ணி முத்தித்துத் கீழாறினால் மாறி
வேற்றையஞ்சு தன்னில் மிகப்பெருக்கிப் பார்த்ததிலே
பாதி தள்ளி மூன்றிற் பகிர விதையாகும்
பூசணிக்காய் தோறும் புகல்"
- கணக்கதிகாரம்.
ஓர் பூசணிக்காயை உடைக்காமலே அதில் எத்தனை விதை இருக்கிறது என்பதை உங்களால் கூற முடியுமா ? முடியும் என்கிறது நம் தமிழ் செய்யுள். "கணக்கதிகாரம்" கொறுக்கையூரைச் சேர்ந்த காரி நாயனார் என்பவர் எழுதிய ஒரு தமிழ்க் கணித நூல்
ஒரு பூசணிக்காயின் கீற்றுகளை எண்ணிக்கொண்டு அதை மூன்று, ஆறு, ஐந்து இவற்றால் பெருக்கி வரும் விடையை பாதியாக்கி மீண்டும் மூன்றால் பெருக்கினால் வருவது விதைகளின் எண்ணிக்கையாகும்.
ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிக்கையை "அ" என்க. பாடலின் படி அதை 3,6,5 ஆகியவற்றால் பெருக்க கிடைப்பது "90அ" ஆகும் அதை பாதியாக்கினால் கிடைப்பது "45அ" ஆகும். அதை மீண்டும் மூன்றால் பெருக்க கிடைப்பது "135அ" ஆகும்.
ஒரு பூசணியில் உள்ள கீற்றுகளின் எண்ணிகையை அ=6 ஆறு எனக்கொண்டால் (135 * 6 = 810) 135 ஐ ஆறால் பெருக்க கிடைப்பது 810 ஆகும். எனவே பூசணியில் உள்ள விதைகளின் எண்ணிக்கை 810 ஆகும்.

தாம்பிர பாத்திரம் நல்லது. ஏன்?

தாம்பிர பாத்திரத்தில் ஊறியநீர் கண்ணுக்கு நல்லது. ஏன்?
தாம்பிரம் என்னும் செம்பு, பஞ்ச பூதத்திலே ஒன்றான தீக்கூறு உலோகமாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது. அதேபோல் கண் தீக்கூறாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.
தாம்பிர பாத்திரத்தில் ஊறிய நீரில் கண்கள் கழுவி வரும் பழக்கம் சங்ககால முதல் தமிழகத்தில் வழக்கில் உள்ளது. சித்த மருத்துவத்தில் கண் நோய்களுக்கு செய்யப்படும் அனைத்து மருந்து வகைகளில் செம்பு ஒரு பொருளாக சேர்க்கப்படுவதும், பழக்கிராம்பு பக்குவ எண்ணெய் போன்ற கண் மருந்துகளும்,செப்பு பாத்திரத்தில் சேகரிக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருவதும் உண்மை.
தாம்பிர பாத்திரத்தில் ஊறிய நீரில் கண்கள் கழுவி வரும் போது,கண் பகுதியில் கிருமிகள் அழிக்கப்பட்டு,கண்ணுக்கு பலனளிப்பதாக நவீன ஆராய்ச்சிகள் உரைக்கின்றன.
Jul 30, 2014 | By: R.T.அமுதன்

தூங்கும் முறை பற்றி சித்தர்கள்

இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.

தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். ஆனால் இன்றைய நாகரீக உலகில் இணையதள நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் இரவில் கண் விழித்து பகலில் தூங்குகின்றனர். இதனால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர் பாடல் ஒன்று.

சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக் 
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை 
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை 
நம்பிக் காண் 


இதன் விளக்கம் :-

இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்]சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.

வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல் இரவில் நித்திரையில்லாதவரை பற்பல நோய்கள் கவிக் கொள்ளும்.

எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.

உத்தமம் கிழக்கு, ஓங்குயிர் தெற்கு, மத்திமம் மேற்கு, மரணம் வடக்கு.

கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு,அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.

இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும். 

மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் [பிராண வாயு] உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது. 

இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.

வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்.

கிணறு அமைப்பது எப்படி?

அந்த காலத்தில் எப்படி எந்த டெக்னாலஜியும் இல்லாம கிணறு வெட்டுனாங்க??? 
கிணறு அமைப்பது என்பது அத்தனை எளிதான காரியமில்லை. பலர் சேர்ந்து உழைத்து உருவாக்கிட வேண்டிய ஒன்று. ஒரு வேளை தோண்டிய கிணற்றில் தண்ணீர் வராமல் போய்விட்டால் அத்தனை உழைப்பும் வீணாகி விடும். அதே போல் கோடையில் கிணற்றில் நீர் வறண்டு போகும் வாய்ப்பும் உள்ளது 
ஆனால் இவற்றிற்கெல்லாம் எளிய இலகுவான தீர்வுகள் இதோ. மனையின் குறிப்பிட்ட ஏதாவது ஒரு பகுதியில் அதிகளவு பச்சை பசேலென புற்கள் வளர்ந்திருந்தால், அந்த இடத்தில் கிணறு தோண்ட குறைந்த ஆழத்தில் நீரூற்று தோன்றும் என்கின்றனர் . சரி நீரூற்று இருக்கும் ஆனால் நல்ல நீரூற்று என அறிவது எப்படி? நவதானியங்களை அரைத்து கிணறு வெட்ட வேண்டிய நிலத்தில் முதல் நாள் இரவு தூவி விடவேண்டும். அடுத்த நாள் கவனித்தால் எறும்புகள் இவற்றை சேகரித்து ஒரே இடத்தில் கொண்டுசென்று சேர்த்த அடையாளங்கள், அதாவது தடயங்கள் இருக்குமாம். அந்த இடத்தில் கிணறு வெட்டினால் தூய சிறப்பான நன்னீர் கிடைக்கும் என்கிறார்கள். 
சரி தூய நீரும் கண்டு கொண்டாயிற்று. . . . கோடைகாலத்திலும் வற்றாத நீர் ஊற்று எந்த இடத்தில் இருக்கிறது என்று அறிவது எப்படி ? கிணறு வெட்ட இருக்கும் நிலப் பகுதியை நான்கு பக்கமும் அடைத்து விட்டு பால் சுரக்கும் பசுக்களை அந்த நிலத்திட்க்குள் மேய விட வேண்டும். பின்னர் அந்த பசுக்களை கவனித்தால் மேய்ந்த பின் குளிர்ச்சியான இடத்தில் படுத்து அசை போடுகின்றனவாம். அப்படி அவை படுக்கும் இடங்களை நான்கு , ஐந்து நாட்கள் கவனித்தால் அவை ஒரே இடத்தில் தொடர்ந்து படுக்குமாம . அந்த இடத்தில் தோண்டினால் வற்றாத நீரூற்றுக் கிடைக்குமாம்.
Jul 29, 2014 | By: R.T.அமுதன்

கணை எருமை விருட்ச பால்

காய கற்ப வகைகளிலேசிறப்பாகயாதொரு பக்குவமும் இன்றி,அப்படியே உட்கொண்டு காய சித்தி அடையும் வழிதனையும் சித்தர்கள் பாடல்களில் மறைப்பொருளில் உரைத்திருக்கின்றனர். அத்தகைய ஒரு காய கற்பம்தான் கணை எருமை விருட்ச மரத்திலிருந்து வடியும் பால்அந்த பால் ஒரு கட்டத்தில் உறைந்துபெருந்துகள்கள் வடிவில் மரத்திலேயே காணப்படும்.
நாம் வணங்கும் சதுரகிரி ஈசன் அருளால்அவரை அனுதினமும் தொழும் ஆதிசித்தர்கள் ஆசிகளாளும்நமக்கு கணை எருமை விருட்ச மூலிகை அமிர்த பால் அதன் பெருந்துகள் வடிவத்தில் கிடைத்தது,
கணை எருமை விருட்சம் சித்தர்களால்மிக உயர்வான விருட்சமாகக் கூறப்படுகிறதுகணை எருமை விருட்சம் அருகே மனிதர் வாடை அறிந்தாலேஅந்த விருட்சம் கணைத்துத்தன் எச்சரிக்கை உணர்வை பிற அதனைச்சார்ந்த உயிர்களுக்கு அறியச்செய்யும்.மேலும் பவுர்ணமி தினங்களில் கணைக்கும் கணை எருமை விருட்சம் அமாவாசை நாட்களில் அந்த கற்பப்பாலை சுரக்கும்.இத்தகைய அரிய நிகழ்வை மலை வாழ் மக்கள் எளிதில் இனங்கண்டுகொள்வர்.

அத்தகைய மிக உணர்வான கணை எருமை விருட்சம்தன் இயல்பில்,அதன் மரப்பட்டைகளில் பால் சுரக்கும் தன்மையுடையதுமேலும்,இத்தகைய பாலேபின்னர் பிசினாகமுருங்கைப்பிசின் போல மரத்திலேயே காய்ந்து இள வெண்மை நிறத்தில் காணப்படும் துகள்களாகிறது. இந்த அரிய வகை பிசினே கணை எருமை விருட்ச மூலிகை அமிர்தமாகிறது. சுவைக்க கற்கண்டு போலஇனிப்புச்சுவையுடன் இருக்கும் இந்த அரிய கணை எருமை விருட்ச அமிர்தம் சாப்பிட்டவுடனே தேகத்தைக் கற்பமாக்கும் வல்லமை வாய்ந்தது.
இந்த கணை எருமை விருட்ச அமிர்த மூலிகை கற்பத்தைதினமும் ஓரிரண்டு மிளகு அளவு வெறும் வயிற்றில் காலை வேளைகளில் ,தொடர்ந்து 10 நாட்கள் மட்டும் சாப்பிட்டு வரதேகம் காய சித்தியாகும்,உடல் நோய்கள் உண்டாக்கும் கிருமிகள் நீங்கி,இரத்தம் சுத்தமாகும்உடல் ஆரோக்கியம் மிகும்உடல் வலிமை உண்டாகும்.நீடித்த இளமைத் தோற்றமும்ஆயுளும் உண்டாகும்.
இந்த மூலிகை அமிர்தம் சாப்பிட கடைபிடிக்க வேண்டிய பத்திய முறைகள்அளவான அருசுவை குறைந்த உணவுவகைகள் ,நற்சிந்தனை மற்றும் போகம் நீக்கல்.
இத்தகைய கற்ப மூலிகையான கணை எருமை விருட்ச அமிர்தம் எனப்படும் மூலிகைப் பால் திரட்டான பிசின் மிக மிக அரிதான ஒன்று. வருடத்தில் ஆடி மாதத்தில் மட்டுமேகாணக்கிடைக்கும் இந்த அமிர்தம் மரத்தில் இருந்தாலும்மனிதர் கண்ணில் படுவதில்லைமலை வாழ் மக்களில் சிலருக்கு மட்டுமே இந்த கணை எருமை விருட்ச பால் அமிர்தம் இருப்பது தெரிந்தாலும்அவர்களாலும்  இதை எளிதாக அடைய முடியாத நிலையை இயற்கையே மிக இயல்பாகப் படைத்திருப்பது தான் மிக யோசிக்க வேண்டிய ஒரு விந்தை. ஏனெனில்இந்த கற்ப விருட்ச மூலிகை அமிர்தத்தை கண்டு அதை மலை வாழ் மக்கள் எடுக்குமுன் மலைகளை காக்கும் இறைவனின் படைப்புகளான மலைப்பறவைகள்,மலைக்கரடிகள் மற்றும் மந்திகள் இவற்றின் இஷ்ட உணவு இந்த கற்ப விருட்ச அமிர்தம். அவை இந்த அரிய அமிர்தத்தை பிறர் காணுமுன் உண்டு விடுகின்றன. ஒருவேளை மலைகளை மலைகளில் வாசம் செய்யும் விலங்குகள் மட்டுமே காக்க முடியும் என எண்ணி அந்த விலங்குகளின் ஆயுளையும் ஆரோக்கியத்தையும் இந்த கணை எருமை அமிர்த கற்பம் மூலம் காக்க எண்ணும் ஈசனின் திருவிளையாடலோ,
ஆயினும்நமக்கும் இந்த அரிய கணை எருமை விருட்ச அமிர்த கற்பம் சொற்ப அளவேனும் கிடைக்கும். நாம் இந்த கற்பத்தை சற்றே காத்திருந்து பெற்றாலும் பலன் நிச்சயம். இந்த அரிய கற்பம் ஒவ்வொரு வருடமும் ஆடி மாதத்தில் மட்டுமே கிடைக்கக்கூடியதுஅதுவும் மிகக் குறைந்த அளவில் மட்டுமே. எனவேதான் நாம் காத்திருக்க வேண்டும்மூலிகை சாப்பிடுவதே மிகப்பெரும் பாக்கியம் அதுவும் உடல் ஆரோக்கியம் காக்கும்,நீடித்த இளமை ஆயுள் தரும் அற்புத காய கற்பம் என்றால்!?