Dec 30, 2011 | By: R.T.அமுதன்

சித்தர்கள் யார் ?

சித்தர்கள் என்றால் அறிவு நிறைந்தவர்கள் என்று பொருள். சித்திகள் என்ற மனித அறிவுக்கு எட்டாத பல காரியங்களில் ஈடுபடுபவர்கள். உலகத்தின் தொன்மையான மொழி தமிழ் மொழி. இந்தப் பண்பாட்டின் ஒரு அம்சமாக வளர்ந்த அறிவியல்தான் சித்த மருத்துவம். சித்த மருத்துவ அறிவியலை உருவாக்கிய தமிழகத்தின் பண்டைய அறிவியலாளர்கள்தான் சித்தர்கள். தியானம், மருத்துவம், ஆன்மீகம், தத்துவம், விஞ்ஞானம், ரசாயனம், சிற்பம், மொழியறிவு என பல்வேறுபட்ட துறைகளில் சிறந்து விளங்கியவர்கள் நம் சித்தர்கள். செம்பு, கல், மண் என தங்கமாக்கும் சொர்ண ரகசியம், ஒருவரின் உடலிலிருந்து மறு உடலுக்கு உயிர் மாறும் கூடுவிட்டு கூடு பாயும் முறை, விலங்குகளுடன் பேசுதல், வசிகரித்தல், உயிர் கொடுத்தல், நீரில் நடத்தல், காற்றில் மிதத்தல் என பல்வேறு சித்துகள் எனப்படும் திறன்களையும் பெற்றிருந்தார்கள்.
சித்தர்கள் தம் வாழ்வை எவ்வித வெற்று ஆடம்பரங்களுக்கோ தேவைகளுக்கோ உட்படுத்தாமல் இயற்கையோடு இயைந்த பெருவாழ்வை வாழ்ந்துள்ளனர். எதைப்பற்றியும் கவலைப்படாது, எவ்வித எதிர்பார்ப்பும் இன்றிவாழ்ந்த சித்தர்கள், பாமரர் நலனுக்காக உண்மையான முறையில் அன்றைக்கே செய்தவர்கள் சித்தர்கள். மக்களின் நம்பிக்கையை பெறவும், மூடநம்பிக்கைகளிலிருந்து வெளிக்கொணரவும், தெய்வங்கள்பற்றிய தேவையற்ற பயத்தை போக்கவுமே விண்ணில் பறப்பது, இரும்பைத் தங்கமாக்குவது போன்ற இரசவாத வேலைகள் செய்து சித்தர்பால் மக்களுக்குள்ள பயங்களை போக்கியும், தம் கருத்துக்களை மக்கள் முன்வைத்து செயல்பட்டுள்ளனர்.மேலும் எந்தவொரு இடத்திலும் சித்தர்கள் தங்களது பணியினை சிறப்பானதென்றோ, தங்களால் மட்டுமே மக்களை கடைத்தேற்றமுடியும் என்ற பிரச்சார வழியையோ ஒரு போதும் கையாளவில்லை என்பதினின்றே அவர்களின் மாண்பினை உணரலாம்.

தமிழ் எழுத்துக்களின் மாற்றம்


Dec 29, 2011 | By: R.T.அமுதன்

பிரபஞ்ச வரலாறில் தமிழ் தோன்றியது எப்போது ?

தமிழர் நாகரிகமும்,சீன நாகரிகமும் உலகின் மிகப் பழமையான இரு நாகரிகங்கள்.

கி.மு 14 பில்லியன் - பெரும் வெடியில் உலகம் தோன்றியது.

கி.மு 6 - 4 பில்லியன் - பூமியின் தோற்றம். 

கி.மு. 2.5 பில்லியன் - நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம்.முதன் முதலில் தமிழ்நாட்டில்         தோன்றியது.தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது. 

கி.மு. 470000 - இக்கால இந்தியாவின் தமிழ் நாடு,பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது. 

கி.மு. 360000 - முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

கி.மு. 300000 - யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர். 

கி.மு. 100000-  நியாண்டெர்தல் மனிதன் கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர். கி.மு. 75000 கடைகி பனிக்காலம். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன். 

கி.மு. 50000 - தமிழ்மொழியின் தோற்றம். 

முதல் வணக்கம்

என்னை இங்கே அனுப்பி வைத்த இறைவனுக்கும் என்னை வளர்த்த தாய் தந்தைக்கும் என்னை செதுக்கி கொண்டிருக்கும் என் நண்பர்களுக்கும் அனைத்திற்கும் மேல் என்னை ஆதி முதல் அந்தம் வரை காத்தருளும் என் குருநாதர் போகர் சித்தருக்கும் அனைத்து சித்த பெருமக்களுக்கும் என் முதல் வணக்கத்தை சமர்பிகின்றேன்.

என் அனுபவத்தில்  இவை அனைத்தும் நான் படித்து திரட்டிய தகவல் மட்டுமே.இதில் மாற்று கருத்து இருந்தால் அனுபவம் உள்ளவர்கள் உடனே தெரிவிக்கவும். என்னை நான் மாற்றிக்கொள்கிறேன்