Dec 26, 2012 | By: R.T.அமுதன்

முக்கிய ஆசனங்கள்

பத்மாசனம்
  நிமிர்ந்து சம்மணமிட்டு உட்கார்ந்து இடது காலை வலதுதொடையின் மீதும், வலது காலை இடது தொடையின் மீதும் வைத்து  நிமிர்ந்து  உட்காரவும். நம் பாதங்கள் மேல்பு றத்தில் பார்த்ததுபோல இருக்க வேண்டும். குண்டாக  இருப்பவர் களுக்கு சற்றுசிரமமாகஇருக்கும். இது பழக பழக சரியாகிவிடும்.
பயன்கள் :  இடுப்பு பலப்படும், உடலில் ரத்தம் நன்கு சுத்திகரிக்க படும், கூன் முதுகு ரியாகும், உடலில் சுறு சுறுப்பு உண்டாகும்.

தணுராசனம்
குப்புற படுத்துக்கொண்டு இரண்டு கால்களையும் முழங்காலுக்கு மேலுள்ள பகுதியை இரண்டு கைகளை பின்னே நீட்டி பிடித்து மூச்சை பிடித்து உங்கள் தலையை மேலே தூக்கி நேராக பார்க்கவும். இப்பொழுது நிதானமாக மூச்சு விடவும். இதே போல் ஐந்து அல்லது ஆறு முறை இந்த பயிற் சியை செய்ய லாம்.
 பயன்கள் : நம் வயிற்றில் உள்ள வேதிபொருலான அட்ரினல், தைராய்டு, பிட்யுட்டரி போன்ற சுரப்பிகளை சரிவர இயங்க செய்கிறது. வயிற்றின் கோளாறுகளை நீக்குகிறது, உடலுக்கு சுறுசுறுப்பு அளிக்கிறது.

சிரசாசனம் 
தரையில் ஒரு போர்வையை விரித்து தலையை கீழே வைத்து கைகளை ஆதரவாக வைத்து கொண்டு அப்படியே உங்கள் காலை மேலே தூக்க வேண்டும். சரியாக 90 டிகிரி கோணத்தில் தலைகீழாக நிற்க வேண்டும். குறைந்தது ஒரு நிமிடம் இதே நிலையில் இருக்கவும்.  இந்த ஆசனத்தை இருதய சம்பந்தப்பட்ட நோய் உள்ளவர்கள் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உள்ளவர் கண்டிப்பாக செய்ய கூடாது.

பயன்கள்:  தினமும் இதனை செய்வதால் நம் மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தினை அதிகரிக்கும், மூளை சுறுசுறுப் பாகும்.

 
வஜ்ராசனம் :
இரு கால்களை பின்புறமாக மடக்கி உட்கார்ந்து நம் பின்புறங்கள் இரு கால்களின் மேல் இருக்க வேண்டும். இதே  நிலையில் 15 நிமிடம் இருக்கவும். 
பயன்கள்: வயிற்றில் உள்ள கோளாறுகள், அஜீரணம் குணமா குதல் , முது முதுகு தண்டுவடம் வலுப்பெறும்.

விபரீதகரணி
நேராக படுத்துகால்கள் இரண்டையும் 90 டிகிரிக்கு மேலே தூக்க வேண்டும், மேலே தூக்கும் போதே மூச்சை இழு த்து விட்டு கொண்டே இரண்டு கைகளை பக்கவாட்டில் இறுகப் பிடித்து கொள்ள வேண்டும்.  
பயன்கள்: இந்த ஆசனம் செய்வதனால் இடுப்பு, வயிறு, பின்புறச் சதைகள் ஆகியன குறைந்து அழகாகத் தோற்றமளிக்கும்.  

புஜங்காசனம் 
தரையில் குப்புற படுத்து கொண்டு இரண்டு கைகளையும் உங்கள் காதுகளுக்கு நேராக நிறுத்தி உங்களுடைய தலையை மட்டும் தூக்கவும். உங்களுடையை வயிற்று பகுதியை தூக்க கூடாது. 
பயன்கள்:  இந்த ஆசனம் செய்வதனால் வயிற்று பகுதியில் உள்ள சதைகள் நீங்கும், ரத்த ஓட்டம் அதிகரிக்கும், முதுகு தண்டுவடத்தில் உள்ள வலி நீங்கும்.

பச்சிமோத்தாசனம்
இரு கால்களை  நீட்டி நேராக உட்காரவும். இரு கைகளும் மேலே உயர்த்தி மெதுவாக மூச்சை இழுத்துவிட்டுக் கொண்டே கை விரல்களால் கால் பாதத்தையோ அல்லது கட்டவிரலையோ பிடித்து கொள்ள வேண்டும். கால்களை மடக்க கூடாது. இந்த நிலை யில் 3 முதல் 5 நிமிடங்கள் வரை இருங்கள்.
பயன்கள்: தொப்பை குறைய நல்ல வழி இது, இடுப்பு பகுதியில் இருக்கும் தசைகள் குறையும்.

ஏன் யோகாசனம் ?


  •  இன்றைய  கணினி உலகில் அனைவரும்  உடற்பயிற்சி என்பதே மறந்து விட்டனர்    “பல் போன பிறகு தான் முறுக்கு சாப்பிட ஆசை வரும்” என்பது போல்  நமக்கு நோய் என்று வந்து மருத்துவரிடம் செல்லும் போது தான் நமக்கு புரியும்.
  • மருத்துவரிடம் சென்று அவர் தரும் வேதிப்பொருளை (மாத்திரைகளை) வாங்கி சாப்பிடுவதை விட   இந்த யோகாசனகளை செய்தால் நம் உடலோடு சேர்த்து நம் உள்ளமும் புத்துணர்ச்சியோடு  காணப்படும்.  
  • ஒவ்வொரு நோய்க்கும் தீர்வாக ஒவ்வொரு ஆசானங்கள்   இருப்பதாக வல்லுனர்கள் கூறுகின்றனர்.
  • ஆசானங்கள் செய்வதால் வெளி உறுப்புகள் மட்டுமின்றி உடலின் உள்ள அனைத்து நாடி நரம்புகளுக்கும் புத்துணர்ச் சியை   அளிக்கும் சக்தி படைத்தது இந்த யோகாசனங்கள்.
  • நாம் அன்றாட வாய்வில் செய்யும் ஒவ்வொரு செயல் களிலும் ஓவ்வொரு ஆசான்கள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகிறார்கள்.
  • ஒவ்வொரு நாளும் பல் தேப்பது குளிப்பது சாப்பிடுவது எப்ப எந்தளவுக்கு முக்கியமோ உடற்பயிற்சி செய்வதும் அந்த அளவுக்கு முக்கியம்.
  • உலகில் எண்ணிலடங்கா ஆசானங்கள் உள்ளன இருந் தாலும் சில குறிப்பிட்ட ஆசனங்களை  செய்தாலே நம் வாழ்நாள் முழுதும் நோய்நொடியின்றி புத்துணர்ச் சியோடு இருக்கலாம்.

யோகா


5000 ஆண்டுகளுக்கு முன் இந்தியாவில் தோன்றிய உடற்  பயிற்சி  தியான முறை யோகக் கலை அல்லது யோகாசனம் ஆகும்.  யோகாச னம் என்பது அந்த காலத்தில்  வாழ் ந்த யோகிகள் காட்டில் மிருகங்கள் பறைவகள் இவைகளின் செயல்க ளை பார்த்து வடிவமைத்தார்கள் என் று பல தகவல்கள் இருந்தாலும்  இந்த அறிய பொக்கிசத்தை முதன் முதலில் உலகுக்கு எழுத்து வடிவில் அளித்தவர் பஞ்சலி முனிவர் தான்

 கவனிக்க வேண்டியவை
 
*  நல்ல காற்றோட்டமான இடத்தை தெரிவு செய்யவும்.  
 
* தனக்கு வராத ஆசனங்களை மிக கஷ்டப்பட்டு செய்ய முயற்சிக்க க்கூடாது. பழக பழக வந்துவிடும்.
 
*  யோகாசனம் செய்ய ஆரம்பிக்கும் முன் நாடி சுத்தி செய்து கொள் ளவும்.
 
* ஒவ்வொரு ஆசனத்திற்கு இடையிலும் நிதானமாக ஆழமாக மூச்சை இழுத்து வி ட்டு அடுத்த ஆசனத்தை தொ டர லாம்.
 
* தியானம் செய்த பின் எவ்வாறு சாந்தியோகம் முக்கியமோ அதே போல யோகாசனம் செய்த பின் வாசனம் மிக முக்கியமாக செய்யவும்.
 
*  யோகாசனம் செய்யும் போது வியர்வை வரும் அளவிற்கு செய்யக் கூடாது. காலை சூரிய ஒளிபட்டு வருவது பிரச்சனையில்லை. நிதானமாக செய்வதே முக்கியம்.
 
* சில முக்கிய ஆசனங்கள் அதிக நேரம் பயிலக்கூடாது.
Dec 14, 2012 | By: R.T.அமுதன்

தமிழர்கள் அணிந்துவந்த ஆதிகால அணிகலன்கள்


1. தலையணி : தாழம்பூ, தாமரைப்பூ, சொருகுப்பூ, சாமந்திப் பூ, அடுக்குமல்லிப் பூ, இலை, அரசிலை, பதுமம், சரம், பூரப்பாளை, கோதை, வலம்புரி.


2. காதணி : தோடு, கொப்பு, ஓலை, குழை, இலை, குவளை, கொந்திளவோலை,  கன்னப்பூ, முருகு, விசிறி முருகு, சின்னப்பூ, வல்லிகை, செவிப்பூ, மடல.;

3. கழுத்தணி : கொத்து, கொடி, தாலிக்கொடி, கொத்தமல்லிமாலை, மிளகு மாலை, பிச்சியரும்பு மாலை, நெல்லிக்காய் மாலை, மருதங்காய் மாலை, சுண்டைக்காய் மாலை, கடுமணி மாலை, தாழம்பூ அட்டிகை, மாங்காய் மாலை, மாதுளங்காய் மாலை, காரைப்பூ அட்டிகை, அரும்புச்சரம், மலர்ச்சரம், கண்ட சரம், கண்டமாலை, கோதை மாலை, கோவை.


4. கை அணிகலன் : காப்பூ, கொந்திக்காய்ப்பூ, கொலுசு

5. கைவிரல் அணிகலன் : சிவந்திப் பூ, மோதிரம், அரும்பு, வட்டப் பூ


6. கால் அணிகலன் : மாம்பிஞ்சு கொலுசு, அத்திக்காய்க் கொலுசு, ஆலங்காய் கொலுசு


8. கால் விரல்  அணிகலன் : கான் மோதிரம், காலாழி, தாழ் செறி, நல்லணி, பாம்பாழி, பில்லணை, பீலி, முஞ்சி, மெட்டி


9. ஆண்களின் அணிகலன்கள் : வீரக் கழல், வீரக் கண்டை, சதங்கை, அரையணி, அரைஞாண், பவள வடம், தொடி, கங்கணம், வீரவளை, கடகம், மோதிரம், கொலுசு, காப்பு, பதக்கம், வகுவலயம், கழுத்தணி, வன்னசரம், முத்துவடம்,. கடுக்கண், குண்டலம். ஆகியனவாகும்.
Dec 12, 2012 | By: R.T.அமுதன்

சோற்றுநீர் எனப்படும் நீராகாரம்..!


ஆற்றுநீர் வாதம் போக்கும்
அருவிநீர் பித்தம் போக்கும்
சோற்றுநீர் இரண்டையும் போக்கும்

                                         ஆறும், அருவியும் இல்லாத ஊரில் உள்ள மக்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்ததுதான் சோற்றுநீர். இதனால் வாத நோய்களான பக்கவாதம் கைகால் அசதி, முடக்குவாதம் மற்றும் பித்த நோய்களான வயிற்றுப்புண், இரத்த மூலம், சரும நோய்கள் வராது தடுக்கும். அத்துடன் கோடைக்கால பாதிப்புகளான வயிற்றுவலி, சருமத்தில் தோன்றும் வேனல் கட்டி, வேர்க்குரு, தேக அனல் ஆகியன வராது காக்கும். சோற்றுநீர் அருமையை உணர்ந்த மேல்நாட்டு விஞ்ஞானி ஒருவர் அதனை சோதனைச் சாலையில் ஆராய்ந்து பிஎச்.டி. பட்டம் பெற்றுள்ளார் என்பது சோற்றுநீரின் அருமைக்குக் கிடைத்த அண்மைக்கால பெருமை!
                          
கிராம மக்களின் தினசரி உணவாகவும், காலைநேர பானமாகவும் தொன்று தொட்டு காலை பழக்கத்தில் இன்றுவரை தொடரும் அன்றாட ஆரோக்கிய பானம் நீராகாரம். முதல்நாள்
இரவில் 2 பிடி சோற்றினை ஒரு பாத்திரத்தில் போட்டு 2 குவளை சுத்தமான தண்­ணீர் விட்டு மூடி வைக்க வேண்டும். காலையில்
எழுந்ததும் அதில் தேவையான அளவு கல்லுப்பு சேர்த்து சிறிய வெங்காயம் 3 நறுக்கிப் போட்டுக் கரைத்து அப்போதே சாப்பிட வேண்டும்.
Dec 7, 2012 | By: R.T.அமுதன்

பசி வந்திடப் பத்தும் பறக்கும்

பசி மிகவும் கொடுமையானது. பசி வந்துவிட்டால் அதன் முன் எதுவும் நிற்க முடியாது. எவ்வளவு பெரிய அறிவையும் ஆற்றலையும் வீரத்தையும் ஏன், தவத்தையும் கூட பசி ஒரே நொடியில் வென்றுவிடும். பசிக் கொடுமை மிகவும் பொல்லாதது. எந்தச் சத்தியாலும் பசியை வெல்ல முடியாது.
இந்தப் பழமொழியில் வரும் 'பத்து' எவை?
மானம் – குலப்பெருமை – கற்ற கல்வி – அழகிய தோற்றம் – பகுத்தறிந்து பார்க்கும் அறிவு – தானம் செய்வதால் வரும் புகழ் – தவம் மேற்கொள்ளும் ஆற்றல் – முன்னேற்றம் – விடாமுயற்சி – பெண்மீது கொள்ளும் காதல் உணர்ச்சி ஆகிய பத்தும் பசியால் வாடும் ஒருவனிடமிருந்து உடனே ஓடிவிடும் 

அரைஞாண்கயிறு

ஆடவர்கள் இடுப்பில் கட்டுகிற அரைஞாண்கயிறு ஒரு நோய் தடுப்பு முறையாக வந்திருக்கிறது என்பது இன்று பலருக்குத்தெரியாது. ஆடவர்களுக்குப் பொதுவாக குடல் இறக்க நோய் வருவதுண்டு. அந் நோயைத் தடுக்கவே இடுப்பில் அரைஞாண்கயிறு முன்பெல்லாம் கட்டுகிற பழக்கம் தமிழர்களிடையே இருந்தது.
                         பெண்களுக்கு மிகக் குறைந்த அளவிலேயே இந்நோய் வரும் என்பதால் அவர்கள் அரைஞாண் கயிறு கட்டுவதில்லை. பிறகு அக்கயிறு வெள்ளிக்கொடியாக மாறியது. இன்றைக்குஅநாகரீகம் எனக் கருதி அரைஞாண்கயிறும் கட்டுவதும் குறைந்து விட்டது.

ஆண்களின் பருவம்

பெண்களின் பருவம்

Dec 5, 2012 | By: R.T.அமுதன்

சனிபெயர்ச்சி

இன்று பல நாடுகள் செயற்கைகோள்களை விண்வெளிக்கு அனுப்பி வருகின்றன. அவற்றில் செல்போன் பயன்பாடு, ராணுவ பயன்பாடு, உளவு என பல்வேறு கார ணங்களுக்காக பயன்படுத் தப்படுகிறது. சில வருடங் களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதி யை கடக்கும் பொது மட்டு ம் 3 வினாடிகள் ஸ்தம்பி த்து விடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன் செயற்கை கோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில் லை.
இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது.
இது எப்படி சாத்தியம்??? – என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகை யே மிரள வைத்தது.
ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின்-தமிழ்நாடு அருகில் உள்ள புதுச் சேரி- திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்து விடுகின்றன.
அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ???
ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோ விலின் மீது விழுந்துகொண்டே இருக்கி றது.
இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கரு நீல கதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெ ளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கைகோள்கள் இந்த கரு நீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்துவிடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படுவதில் லை.
இதில்குறிபிடத்தக்க அம்சம் என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் ‘சனி பகவான்’ தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர். அவர்களும் சனிபகவானை கையெடுத்து கும்பிட்டு உணர்ந்தனர். இன்றுவரை விண் ணில் செயற்கை கோள்கள் திருநள்ளா று பகுதியை கடக்கும் பொது ஸ்தம்பித்து கொண்டே இருக்கிறது.”

 நாம் பல செயற்கை கோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டுபிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி, கதிர் வீசுகள் அதிகம்  விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை, நம்மால் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.
Dec 4, 2012 | By: R.T.அமுதன்

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண் டாம்

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப் பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில்கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியி னை (earth) கலசங்களுக்கு கொடுக்கி ன்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்) ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு தானியத்தை அதிகமா க கொட்டினார்கள்.  “வரகு” மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிற து.
 
                          பனி ரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் “கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது”, அதை இன்றைக்கு சம்பரதாய மாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒரு வேளை தானிய ங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய் வது? இவ்வளவு உயரமான கோபுர த்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து    விதை க்கலாமே!!!
 
                     ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடிதாங்கி யோ அதுதான் முதலில் “எர்த்” ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அத ன் உயரத்தைப்பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கி கள். உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப் படு வார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பா ற்றப்படுவார்  கள்!!!!. சில கோயில் களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலா புறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக் கொண்டு நிற் கிறது!!! இது ஒரு தோராயமான கணக்குதான், இதை  உயரமான கோபுர ங்கள், இதைவிட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு !!!இதை எல் லாம் பார்க்க போனால் “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண் டாம்” என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது. சும்மாவா சொன்னாக பெரியவங்க!!!