Dec 7, 2012 | By: R.T.அமுதன்

பசி வந்திடப் பத்தும் பறக்கும்

பசி மிகவும் கொடுமையானது. பசி வந்துவிட்டால் அதன் முன் எதுவும் நிற்க முடியாது. எவ்வளவு பெரிய அறிவையும் ஆற்றலையும் வீரத்தையும் ஏன், தவத்தையும் கூட பசி ஒரே நொடியில் வென்றுவிடும். பசிக் கொடுமை மிகவும் பொல்லாதது. எந்தச் சத்தியாலும் பசியை வெல்ல முடியாது.
இந்தப் பழமொழியில் வரும் 'பத்து' எவை?
மானம் – குலப்பெருமை – கற்ற கல்வி – அழகிய தோற்றம் – பகுத்தறிந்து பார்க்கும் அறிவு – தானம் செய்வதால் வரும் புகழ் – தவம் மேற்கொள்ளும் ஆற்றல் – முன்னேற்றம் – விடாமுயற்சி – பெண்மீது கொள்ளும் காதல் உணர்ச்சி ஆகிய பத்தும் பசியால் வாடும் ஒருவனிடமிருந்து உடனே ஓடிவிடும் 

0 comments: