இந்த தைப்பொங்கல் நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. இந்த நான்கையும் பற்றி பலர் தவறாகவே புரிந்து வைத்துள்ளனர். போகி நாள் என்பதை "போக்கி"
நாள் என்கிறார்கள். அதாவது வீட்டில் உள்ள கழிவுப்பொருட்கள் பழையனவற்றை போக்கும் நாள் என்கிறார்கள். இது முதலாவது தவறு. . எப்போதும் சுத்தப்படுத்தும் நாளை ஒரு திருநாளாக கொண்டாடியதில்லை. இதென்ன உழவர் சம்மந்தமான நாளில் சம்மந்தமே இல்லாமல் இந்த போகி வருகிறது என சிந்தித்து பார்த்ததில்லையா.
"போகி" என்ற வார்த்தையை தெளிவாக கவனித்தால் தெளிவு பிறக்கலாம் விளைச்சல் என்பது போகம். போகத்துக்குரியவன் நிலத்தின் சொந்தக்காரன்
அதனால் தான் அந்த விழா நிலம் உள்ளவர்கள் வீட்டில் நடக்கும். போகத்துக்குரியவனின் விழா போகி விழா
வயலில் இறங்கி உழைக்கும் விவசாயிக்கு உள்ள விழா பொங்கல் விழா,அவனுக்கு பயன்படும் மாடுகளுக்கான விழா மாட்டுப்பொங்கல் விழா. அந்த உணவை பகிர்ந்துகொள்ளும் நிலமும் இல்லாத ,விவசாயமும் செய்யாத பொதுமக்களின் விழா "காணும் பொங்கல்" விழா

கவனித்துப்பார்த்தால் இது தான் சரியான வரிசை.
நிலத்துக்குரியவன்
விவசாயி
காளைமாடு
பொதுமக்கள்இந்த ஒழுங்கு பொருத்தமாக வரும். இயற்கையுடன் ஒன்றி வாழ்ந்த தமிழன் சூரியனுக்கு நன்றி செலுத்த, உழவனுக்கு நன்றி செலுத்த கொண்டாடிய அர்த்தமுள்ள விழா இது
0 comments:
Post a Comment